/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலமைச்சர் ஆராய்ச்சி நிதி பெற விண்ணப்பிக்கலாம்
/
முதலமைச்சர் ஆராய்ச்சி நிதி பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 29, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாநில அரசின், முதலமைச்சர் ஆராய்ச்சி நிதிக்காக கருத்துருக்களை சமர்ப்பிக்க அவகாசம், ஆக., 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு சார்பில் முதலமைச்சர் ஆராய்ச்சி நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனி பிரிவுகளில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதன் படி, கருத்துரு சமர்ப்பிக்க வரும் ஆக., 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.