/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா

ADDED : ஆக 31, 2024 11:46 PM

கோவை:இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில், நேற்று சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்திய தொழில் வர்த்தக சபையின், 95வது ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்வு, அவிநாசி சாலை சுகுணா மண்டபத்தில் நேற்று மாலை ஆடல், பாடல்களுடன் துவங்கியது.
கடந்த பத்து ஆண்டுகளாக, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், சமூகத்திற்கு பல்வேறு விதங்களில், லாப நோக்கமின்றி பங்காற்றிய நபர்கள், விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். அதன்படி, நடப்பாண்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றிய குணசேகரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் லோகநாதன், யானைகள் மறுவாழ்வுக்காகவும் ஆதரவற்ற நபர்களுக்கும் உதவிய செந்தில்குமார் ஆகியோர் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதில், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு, சக நிர்வாகிகள் ராஜேஷ் லந்து, சுந்தரம், அண்ணாமலை, துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.