/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை அருகே 'யூ டேர்ன்' சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஒப்புதல்
/
அரசு மருத்துவமனை அருகே 'யூ டேர்ன்' சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஒப்புதல்
அரசு மருத்துவமனை அருகே 'யூ டேர்ன்' சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஒப்புதல்
அரசு மருத்துவமனை அருகே 'யூ டேர்ன்' சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஒப்புதல்
ADDED : ஜூலை 03, 2024 01:15 AM
கோவை;கோவை அரசு மருத்துவமனை அருகே, ஆர்ட்ஸ் காலேஜ் சந்திப்பு பகுதியில் 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்த, சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கோவை நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் பகுதியில், தானியங்கி சிக்னல்களை அகற்றி, 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
அவிநாசி ரோட்டில், அண்ணாதுரை சிலை சந்திப்பு தவிர சின்னியம்பாளையம் வரை, 12 கி.மீ., துாரத்துக்கான ரோட்டில், அனைத்து சந்திப்புகளிலும் 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வடகோவை சிந்தாமணி, தடாகம் ரோடு லாலி ரோடு சந்திப்பு மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பு பகுதிகளிலும், 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, வாகனங்கள் தேங்கி நிற்காமல் பயணிக்கின்றன.
திருச்சி ரோட்டில், அரசு மருத்துவமனை கல்லுாரி அருகே ஆர்ட்ஸ் காலேஜ் - கிளாஸிக் டவர்ஸ் சந்திப்பு சிக்னலில் வாகனங்கள் தேங்கின. வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சிக்கல் ஏற்படுவது ஆய்வில் அறியப்பட்டது.
இப்பகுதியில், 'யூ டேர்ன்' அமைக்க, கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பரீட்சார்த்த முறையில் ஒரு பகுதியில் மட்டும், 'யூ டேர்ன்' செய்து ஆய்வு செய்தபின், மற்றொரு பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல், சூலுார் ஏர்போர்ஸ் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால், 'யூ டேர்ன்' வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் முயற்சித்து பார்க்க, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.