/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பள்ளியில் 'ஏப்ரல் கூல்' தினம்
/
தனியார் பள்ளியில் 'ஏப்ரல் கூல்' தினம்
ADDED : ஏப் 02, 2024 12:40 AM
கோவை:மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள, சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில், 'ஏப்ரல் கூல் ' தினம் அனுசரிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் இந்த தினத்தை அனுசரித்தது. இதில், பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில், ''பூமியை குளிர்ச்சியாக மாற்றும், மரங்களை நட்டு, ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடலாம். மாணவர்கள் ஒவ்வொருவரும், மரங்களை நட்டு வளர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேலு, சூற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள் முருகேசன், ஜெயலட்சுமி பங்கேற்றனர். மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

