/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு இயந்திரங்கள் சரியா இருக்கா?
/
மின்னணு இயந்திரங்கள் சரியா இருக்கா?
ADDED : ஏப் 04, 2024 11:33 PM
கோவை;கோவைக்கு கூடுதலாக தேவைப்பட்ட, 1,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல்லில் இருந்து தருவிக்கப்பட்டன. இவற்றை, அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்றும், நாளையும் 'பெல்' இன்ஜினியர்கள் சரி பார்க்கின்றனர்.
கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வரப்போகும் தேர்தலில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டியுள்ளது. கூடுதலாக தேவைப்படும் இயந்திரங்கள், அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு அனுப்ப போதுமான எண்ணிக்கையில் இயந்திரங்கள் இல்லாததால், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, 1,000 இயந்திரங்கள் தருவிக்கப்பட்டன. அவை, தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சரி பார்க்க, திருச்சியில் இருந்து 'பெல்' இன்ஜினியர்கள் இன்று (ஏப்., 5) கோவை வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், இன்றும், நாளையும் ஆய்வு செய்யப்படுகிறது.

