/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம்: 23ம் தேதிக்குள் வரி செலுத்த கெடு
/
நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம்: 23ம் தேதிக்குள் வரி செலுத்த கெடு
நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம்: 23ம் தேதிக்குள் வரி செலுத்த கெடு
நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம்: 23ம் தேதிக்குள் வரி செலுத்த கெடு
ADDED : மார் 06, 2025 12:15 AM

வால்பாறை:
மார்க்கெட் பகுதியில் வரிவசூலிப்பதில் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டு களில் மொத்தம், 1,900 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் மாதவாடகை அடிப்படையில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
வால்பாறை புதுமார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் வாடகை செலுத்தவில்லை என்பதால், நேற்று வழக்கம் போல் நகராட்சி அதிகாரிகள் வரிவசூல் செய்ய சென்றனர்.
அப்போது, வாடகை செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் வாடகை செலுத்த போதிய கால அவகாசம் கேட்டனர். இனியும் கால அவகாசம் தர முடியாது என அதிகாரிகள் கூறியதால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வியாபாரிகளை அழைத்து பேசினர். அப்போது வரும், 23ம் தேதிக்குள் வாடகை செலுத்துவதாக உறுதியளித்தன் பேரில், இருதரப்பினர் இடையேயும் சமரசம் ஏற்பட்டது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'புதுமார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான, 327 கடைகள் உள்ளன. இதில், 61 சதவீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்ய வேண்டியுள்ளது.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வரும், 23ம் தேதிக்குள் நிலுவை தொகையினை செலுத்தாவிட்டால் கடைகளுக்க 'சீல்' வைக்கப்படும்,' என்றனர்.