/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடகளத்தில் அசத்திய ஏ.ஆர்.பி., மாணவர்கள்
/
தடகளத்தில் அசத்திய ஏ.ஆர்.பி., மாணவர்கள்
ADDED : பிப் 28, 2025 10:55 PM

பொள்ளாச்சி,; திருப்பூரில் நடந்த குழந்தைகளுக்கான தடகளப் போட்டியில், ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், அதிக இடங்களில் வென்றனர்.
திருப்பூரில், பிரைட்ஸ் போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான தடகளப் போட்டி நடந்தது. இப்போட்டியில், பொள்ளாச்சி, ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவ்வகையில், 50 மீ., ஓட்டத்தில் மாணவி கனிஷ்காஸ்ரீ, மாணவர் தயானந்த் ஆகியோர் முதலிடமும், 60 மீ., ஓட்டத்தில் தஸ்மையா, சந்தியா ஆகியோர் மூன்றாவது இடம், 70 மீ., ஓட்டத்தில் ஸ்ரீநிஷா மூன்றாவது இடம் பிடித்தார். தொடர் ஓட்டத்தில், கனிஷ்கா, ஷிவானி, தர்ஷினி, ஸ்ரீநிஷா அடங்கிய குழுவினர் மூன்றாமிடம், பலகைத் தாண்டுதலில் தயானந்த், யுகா ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர்.
இதேபோல், பந்து எறிதலில், கனிஷ்கா இரண்டாமிடம், தடை தாண்டுதலில் தஸ்மயா மூன்றாமிடம், நீளம் தாண்டுதலில் தர்ஷினி முதலிடம், தன்வி இரண்டாமிடம், ஷிவானி நான்காமிடம் பிடித்தனர்.
தவிர, குண்டு எறிதலில் ஆரிய சுஷாந்த் முதலிடம் பிடித்தார். அதிக புள்ளிகள் பெற்ற கனிஷ்காஸ்ரீ, தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவர்களை, பள்ளித் தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி, பள்ளி இயக்குனர் அரசுபெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.