/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுதிக்கு ஒரு மகளிர் மாடல் ஓட்டுச்சாவடி இரு தொகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரம்
/
தொகுதிக்கு ஒரு மகளிர் மாடல் ஓட்டுச்சாவடி இரு தொகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரம்
தொகுதிக்கு ஒரு மகளிர் மாடல் ஓட்டுச்சாவடி இரு தொகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரம்
தொகுதிக்கு ஒரு மகளிர் மாடல் ஓட்டுச்சாவடி இரு தொகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஏப் 18, 2024 04:04 AM
உடுமலை : பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், தலா ஒரு மாடல் ஓட்டுச்சாவடி மற்றும் அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடிகளை தயார் படுத்தும் இறுதி கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் சட்டசபை தொகுதிகளில், தொகுதிக்கு ஒரு மகளிர் மட்டுமே உள்ள ஓட்டுச்சாவடி மற்றும் அனைத்து வசதிகளுடன், அலங்கரிக்கப்பட்ட மாடல் ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
மாடல் ஓட்டுச்சாவடி
அனைத்து வசதிகளுடன், அலங்கரிக்கப்பட்ட மாடல் ஓட்டுச்சாவடி, உடுமலை தொகுதிக்கு, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, கணக்கம்பாளையம் பிரைட் நர்சரி அண்டு பிரைமரி பள்ளியிலும் மாடல் ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது.
இங்கு, வாக்காளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, சாமியானா பந்தல், ஏர்கூலர், கம்பள விரிப்பு, பூ அலங்காரம், தோரணங்கள், பலுான் கட்டப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது.
ஓட்டுச்சாவடிக்குள் போடப்படும் டெஸ்க்களில் அழகிய விரிப்புகள் போர்த்தப்பட்டு, பூங்கொத்துக்கள் வைக்கப்படுகிறது.
மகளிர் ஓட்டுச்சாவடி
உடுமலை தொகுதிக்கு, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடி அமைகிறது.
அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் - 1, நிலை அலுவலர் - 2, நிலை அலுவலர் 3 உள்பட ஓட்டுப்பதிவு பணிகளில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்.
வேட்பாளர் சார்பில் பெண் முகவர்கள்; பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபடுவர். பார்த்த உடன் அனைத்து மகளிர் என்பதை தெரிந்துகொள்ளும்வகையில், ஓட்டுச்சாவடிகளில் 'பிங்க்' நிற பலுான் வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கும்.
மிக நேர்த்தியாக மாடல் ஓட்டுச்சாவடி மற்றும் அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடிகளை அமைப்பதற்காக, துாய்மை பணி, உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

