/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.8 லட்சத்திற்கு சமையல் பொருட்களை வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
/
ரூ.8 லட்சத்திற்கு சமையல் பொருட்களை வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
ரூ.8 லட்சத்திற்கு சமையல் பொருட்களை வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
ரூ.8 லட்சத்திற்கு சமையல் பொருட்களை வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
ADDED : ஜூலை 22, 2024 12:05 AM
வடவள்ளி;வடவள்ளியில் டீலரிடம், 8 லட்சத்திற்கு சமையல் பொருட்களை வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றிய நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடவள்ளி, இடையர்பாளையம் ரோடு, ஹரிணி ஆர்கேட் பகுதியை சேர்ந்தவர் சத்யா,33. இவர், யுவ கிருஷ்ணா ஏஜென்சி என்ற பெயரில், டீத்தூள், பிஸ்கட், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பிரபலமான பல நிறுவனங்களில் டீலர்ஷிப் எடுத்து, அந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
2022ம் ஆண்டு, நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த அன்வர் உல்லா,54 என்பவர், சத்யாவிடம் அறிமுகமாகி, தான் மாடர்ன் குரூப் கம்பெனி என்ற நிறுவனம் வைத்து, சமையல் பொருட்களை கேன்டீன்களுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருவதாகவும், பொருட்களை கொடுத்தால், விற்று 15 நாட்களில் பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி சத்யாவும், வெவ்வேறு நாட்களில் 8,27,660 ரூபாய் மதிப்பிலான டீத்தூள், பிஸ்கட், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றை மொத்தமாக கொடுத்துள்ளார். வாங்கிச்சென்ற அன்வர் உல்லா, பல மாதங்களாகியும் பணம் தரவில்லை.
தொடர்ந்து கேட்டதால், இரண்டு தவணைகளில், 1,49,248 ரூபாய் தந்துள்ளார். மீதமுள்ள, 6,78,412 ரூபாயை, தராமல் ஏமாற்றி வந்துள்ளார். வடவள்ளி போலீசில் சத்யா அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்வர் உல்லாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.