/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேசைப்பந்து போட்டிகள் அனைத்திலும் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்ரம் பள்ளி
/
மேசைப்பந்து போட்டிகள் அனைத்திலும் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்ரம் பள்ளி
மேசைப்பந்து போட்டிகள் அனைத்திலும் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்ரம் பள்ளி
மேசைப்பந்து போட்டிகள் அனைத்திலும் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்ரம் பள்ளி
ADDED : செப் 02, 2024 10:54 PM
கோவை:ரத்தினம் கல்லுாரியில் நடந்த மேசைப்பந்து போட்டிகளின் அனைத்து பிரிவுகளிலும், ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியர் வென்று அசத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், தெற்கு குறுமைய அளவிலான போட்டிகளை குனியமுத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி நடத்தி வருகின்றது.
மேசைப்பந்து போட்டிகளில், 14, 17, 19 வயது மாணவ, மாணவியருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள், ரத்தினம் கல்லுாரியில் நடந்தன.
மொத்தம், 12 பிரிவுகளாக நடந்த போட்டிகளில், அனைத்து பிரிவுகளிலும் ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.
இதில், 14 வயது மாணவியருக்கான ஒற்றையர் பிரிவில் பிரகதி உதயேந்திரனும், மாணவர்களுக்கான பிரிவில் நிதின் பெர்னாண்டோவும், 17 வயதிற்கான மாணவியர் ஒற்றையர் பிரிவில் அனமித்ராவும், மாணவர் பிரிவில் நிதேஷும், 19 வயதிற்கான மாணவியர் ஒற்றையர் பிரிவில் அனுஸ்ரீயும், மாணவர்களுக்கான பிரிவில் விஷ்ணுவும் வெற்றி பெற்றனர்.
14 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான இரட்டையர் பிரிவில் பிரகதி உதயேந்திரனும், சுதர்சனாவும், மாணவர்களுக்கான பிரிவில் நிதின் பெர்னாண்டோவும், ஸ்ரீ ரித்திக்கும், 17 வயதிற்கான மாணவியர் இரட்டையர் பிரிவில் அனமித்ராவும், ஸ்வேதாவும், மாணவர்களுக்கான பிரிவில் நிதேஷும், தரனீஷும், 19 வயதிற்கான மாணவியருக்கான இரட்டையர் பிரிவில் அனுஸ்ரீயும், கனிஷ்காவும், மாணவர்களுக்கான பிரிவில் பரத்தும், விஷ்ணுவும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.