/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு துணைத்தேர்வில் ஈசியா பாஸ் ஆகலாம்!
/
10ம் வகுப்பு துணைத்தேர்வில் ஈசியா பாஸ் ஆகலாம்!
ADDED : மே 23, 2024 11:13 PM
பொள்ளாச்சி:பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், சிறு சிறு வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே சுலபமாக தேர்ச்சி பெறலாம் என்று, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10ம் தேதி வெளியானது. இத்தேர்வில் தேர்ச்சி பெறாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து, கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் கணக்கெடுப்பு எடுத்தனர்.
இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இம்மாணவர்களை அந்தந்தப் பகுதி பள்ளிகளில், ஒருங்கிணைத்து ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத, தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தனித்தேர்வர்கள், ஜூன் 1 வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 2 முதல் 6ம் தேதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்நிலையில், அனைத்துப் பாடங்களிலும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே, மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
எளிய வழிமுறை
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மட்டுமல்லாமல், ஆன்லைன்வாயிலாகவும்ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை, மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் இயற்பியல் அல்லதுஉயிரியல்பாடம் மட்டும் படித்தாலே தேர்ச்சி பெற முடியும். கணிதத்தில் கிராப், ஜியொமெட்ரிக் மற்றும் 5 யூனிட்டுகளில் கவனம் செலுத்தலாம்.
சமூக அறிவியலில் காலக்கோடு மற்றும் வரலாற்றில் 2, 4 மதிப்பெண் கேள்விகள், தமிழ், ஆங்கிலத்தில் பொதுவான கேள்விகளைத் தேர்வு செய்து எழுதினால் தேர்ச்சி நிச்சயம்.கடிதம் எழுதுவது, ஒரு பத்தியைப் படித்து பதில் எழுதுவதில் கவனம் செலுத்தலாம். தமிழில் பத்து பாடங்கள் இருந்தால் 5 பாடங்களைப் படித்தாலே, தேர்ச்சி பெற முடியும்' என்றார்.