/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடிக்கையாளர் மீது தாக்குதல்; தங்கும் விடுதி ஊழியர்கள் கைது
/
வாடிக்கையாளர் மீது தாக்குதல்; தங்கும் விடுதி ஊழியர்கள் கைது
வாடிக்கையாளர் மீது தாக்குதல்; தங்கும் விடுதி ஊழியர்கள் கைது
வாடிக்கையாளர் மீது தாக்குதல்; தங்கும் விடுதி ஊழியர்கள் கைது
ADDED : செப் 13, 2024 11:47 PM
கோவை : வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய, தங்கும் விடுதி (லாட்ஜ்) ஊழியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ்; 26 தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜி.,யாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக, கோவை வந்தார். காந்திபுரம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில், அறை எடுத்துள்ளார். விடுதி அறை பிடிக்காததால், ஊழியரிடம் வேறு அறை கேட்டுள்ளார். இதையடுத்து, கணேஷ் மற்றும் ஊழியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊழியர் கணேசை தாக்கியுள்ளார்.
இதை பார்த்த மற்றொரு ஊழியரும் சேர்ந்து தாக்கினார். காயமடைந்த கணேஷ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அவரின் புகார் அடிப்படையில், காட்டூர் போலீசார் லாட்ஜ் ஊழியர்கள் சரவணன், 26 மற்றும் நைனா முகமது, 53 ஆகியோரை கைது செய்தனர்.