/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவியாளர் பணியிடங்கள் காலி; அறநிலையத்துறை ஊழியர்கள் அதிருப்தி
/
உதவியாளர் பணியிடங்கள் காலி; அறநிலையத்துறை ஊழியர்கள் அதிருப்தி
உதவியாளர் பணியிடங்கள் காலி; அறநிலையத்துறை ஊழியர்கள் அதிருப்தி
உதவியாளர் பணியிடங்கள் காலி; அறநிலையத்துறை ஊழியர்கள் அதிருப்தி
ADDED : மார் 01, 2025 05:42 AM
சூலுார்; ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவை உதவி கமிஷனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. பலரும் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், யாருக்கும் நேர்காணலுக்கான அழைப்பும் வரவில்லை. காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவும் இல்லை என, கோவில் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கோவில் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை, திருப்பூர், கரூரில் உள்ள இணை கமிஷனர், உதவி கமிஷனர் அலுவலகங்களில், அலுவலக உதவியாளர்கள், டிரைவர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஒரு சில மாவட்டங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஒரு சில இடத்தில் நேர்காணல் கூட நடத்தவில்லை. இதுவரை பணியிடங்களும் நிரப்பப்பட வில்லை. வேலை கிடைத்துவிடும் என நம்பியிருந்த பலர் ஏமாற்றமடைந்து ள்ளனர்.
இதனால், ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு சுழற்சி முறையில் பணியாளர்களை அனுப்பி அலைக்கழிக்கின்றனர். இதனால், பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.