/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூம்புகார் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் திருட்டு
/
பூம்புகார் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் திருட்டு
ADDED : ஆக 27, 2024 12:36 AM
கோவை;கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து, பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, டவுன்ஹால் பகுதியில் கைவினைப்பொருட்கள், கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யும் பூம்புகார் விற்பனை நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் விற்பனை நிலையத்தை பூட்டி சென்றுள்ளனர்.
மறுநாள் காலை திறக்க வந்த போது, நான்காவது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே கல்லா பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 877 திருட்டு போயிருந்தது. பூம்புகார் நிலைய மேலாளர் ஆனந்தன், உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தி, கைரேகைகளை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.