/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுாரில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
சூலுாரில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 22, 2024 02:19 AM

சூலுார் : சூலுார் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது என, ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சூலுார் நகரம் மற்றும் ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் சூலுாரில் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை அனைத்து பகுதிகளிலும் கொண்டாடி, ஹிந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆன்மீகம், பண்பாட்டை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கோவில்களில் இருந்து அறநிலையத்துறை ஏன் வெளியேற வேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.
கூட்டத்தில், சூலுார் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது, என, தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், கோட்ட செயலாளர் செந்தில், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதன் குமார் உள்ளிட்டோர் பேசினார். 200 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.