தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்திக்கடவு அவிநாசி 2வது திட்டம் சட்டசபையில் அறிவிக்க வேண்டும்

அத்திக்கடவு அவிநாசி 2வது திட்டம் சட்டசபையில் அறிவிக்க வேண்டும்

அத்திக்கடவு அவிநாசி 2வது திட்டம் சட்டசபையில் அறிவிக்க வேண்டும்


ADDED : ஜூன் 10, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: அத்திக்கடவு அவிநாசி நிலை இரண்டாவது திட்டம் குறித்து, நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் அறிவிக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

அத்திக்கடவு அவிநாசி முதல் திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை, இரண்டாவது திட்டத்தில் சேர்க்கப்படும் என, முன்பிருந்த அ.தி.மு.க., தி.மு.க., அரசுகள் அறிவித்தன. இது வெறும், அறிவிப்புடன் நின்று போனது. கடந்த ஆட்சியில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், அத்திக்கடவு அவிநாசி நிலை இரண்டாவது திட்டம் குறித்து, எவ்வித அறிவிப்பும் இல்லை. இது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இம்மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரில், கவர்னர் உரையில் அத்திக்கடவு அவிநாசி நிலை இரண்டாவது திட்டம் குறித்து அறிவிப்பு வரும் என விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் விஜய், நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

இதன் வாயிலாக முதல் திட்டத்தில் விடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குளம், குட்டைகளில் தண்ணீர் நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, கால்நடைகளுக்கும் குடிநீர் பிரச்னை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

இவ்வாறு தமிழக விவசாயிகள் சங்கத் மாநிலத் தலைவர் வேணுகோபால் அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us