/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில துப்பாக்கி சுடும் போட்டி வெற்றிக்கு குறி வைத்த வீரர்கள்
/
மாநில துப்பாக்கி சுடும் போட்டி வெற்றிக்கு குறி வைத்த வீரர்கள்
மாநில துப்பாக்கி சுடும் போட்டி வெற்றிக்கு குறி வைத்த வீரர்கள்
மாநில துப்பாக்கி சுடும் போட்டி வெற்றிக்கு குறி வைத்த வீரர்கள்
ADDED : ஜூலை 28, 2024 12:41 AM
கோவை;கோவை ரைபிள் சங்கம் சார்பில், கோவை போலீசார் பயிற்சி மையத்தில் உள்ள கோவை ரைபிள் சங்கத்தில் நடந்து வந்த, 49வதுதமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி நிறைவடைந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 1650 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.என்.எஸ்., அக்ரானி கமாண்டிங் அலுவலர் மன்மோகன் சிங், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள்:
50மீ., ஆண்கள் மாஸ்டர் பிரிவில் ராகுல், இளங்குமரன்; பெண்கள் மாஸ்டர் பிரிவில் கயல்விழி, எக்தா சேத்; பெண்கள் ஜூனியர் பிரிவில் தர்சினி, கீர்த்தனா; பெண்கள் பிரிவில் கயல்விழி, ரூபாவதி; சீனியர் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஸ்ரீதர், டேரியஸ் அடி கப்ரஜி; ஜூனியர் ஆண்கள் பிரிவில் ராகுல், அபிஷேக்; ஆண்கள் பிரிவில் பிரதீஸ், ராகுல்; சூப்பர் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் சீதாராமா ராவ் ஆகியோர் முறையே, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
25மீ., சென்டர் பயர்: ஆண்கள் மாஸ்டர் பிரிவில் ராகுல், ஸ்ரீநிவாசராமன்; சீனியர் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் சந்திரமோகன், டேரியஸ் அடி கப்ரஜி; ஆண்கள் பிரிவில் ஆதீஸ், ராகுல்; ஜூனியர் ஆண்கள் நீல் நிஷாந்த் தோஷி, ஹரிஸ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
25மீ., ஸ்டாண்டர்டு பிஸ்டல்: ஆண்கள் பிரிவில் நீல் நிஷாந்த், ஷோகம் சங்கவி; சீனியர் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் டேரியஸ் அடி கப்ரஜி, ரவி கிருஷ்ணன்; மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஹநிவாசன், ராகுல்; ஜூனியர் பெண்கள் பிரிவில் விஷ்ருதி, வினுதா; மாஸ்டர் பெண்கள் பிரிவில் சுதா, பவித்ரா; பெண்கள் பிரிவில் அனுஷிகா, காருண்யா; ஜூனியர் ஆண்கள் பிரிவில் கார்த்திக், செந்தில் குமார்; சூப்பர் மாஸ்டர் பெண்கள் பிரிவில், மாலதி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.