/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே தடகள போட்டி
/
மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே தடகள போட்டி
ADDED : ஜூன் 30, 2024 11:40 PM
கோவை,;கோவையில் முதல் முறையாக, மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே தடகளப்போட்டி நடத்தப்படுகிறது.
கோவை மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் பேரின், கோவை தடகள கிளப் மற்றும் வி.ஜி.எம்., மருத்துவமனை சார்பில் மாநகராட்சியில் பள்ளிகள் படிக்கும் மாணவ - மாணவியரை விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்தும் விதமாக, முதலாம் ஆண்டு கோவை மாநகராட்சி இன்டர் ஸ்கூல் தடகளப்போட்டிகள், ஜூலை, 18ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.
இதில், 12, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் மாணவ - மாணவியருக்கு 100மீ., 200மீ., 600மீ., 800மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டியில் பங்கேற்றுm வெற்றி பெறும் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பப்படுகின்றனர்.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 80720 15844, 96292 90771 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அனுமதி இலவசம்.