/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடகளம்; பி.எஸ்.ஜி., பார்மசி கல்லுாரி பிடித்தது முதலிடம்
/
தடகளம்; பி.எஸ்.ஜி., பார்மசி கல்லுாரி பிடித்தது முதலிடம்
தடகளம்; பி.எஸ்.ஜி., பார்மசி கல்லுாரி பிடித்தது முதலிடம்
தடகளம்; பி.எஸ்.ஜி., பார்மசி கல்லுாரி பிடித்தது முதலிடம்
ADDED : ஆக 20, 2024 11:57 PM

கோவை;பெரம்பலுாரில் நடந்த மாநில அளவிலான தடகளப்போட்டியில், பி.எஸ்.ஜி., பார்மசி கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், பார்மசி கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகளப்போட்டிகள், பெரம்பலுாரில் உள்ள தனலட்சுமி ஸ்ரீநிவாசன் பார்மசி கல்லுாரியில் நடந்தன.
இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 42 கல்லுாரிகளில் இருந்து 1650 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பல்வேறு விதமான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட, கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவர்கள் 69 புள்ளிகள், மாணவியர் 70 புள்ளிகள் என, மொத்தம் 139 புள்ளிகள் எடுத்து, தொடர்ந்து ஆறாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை, பி.எஸ்.ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர், உடற்கல்வித்துறையினர் பாராட்டினர்.