ADDED : மே 27, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, அண்ணாஜி ராவ் சாலை பகுதியில், ஏராளமான இருசக்கர வாகன உதிரிபாக கடைகளும், காய்கறி மார்க்கெட்டும் செயல்படுகின்றன. நேற்று முன் தினம் மாலை, தனியார் வங்கி ஏ.டி.எம்.,ல் நுழைந்த மர்ம நபர்கள், இயந்திரத்தை உடைக்க முயன்றனர். சைரன் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச்சென்றனர். மேட்டுப்பாளையம் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
