/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஈஷா'வை களங்கப்படுத்த முயற்சி; நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
/
'ஈஷா'வை களங்கப்படுத்த முயற்சி; நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
'ஈஷா'வை களங்கப்படுத்த முயற்சி; நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
'ஈஷா'வை களங்கப்படுத்த முயற்சி; நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜூன் 16, 2024 04:46 AM

திருப்பூர் : 'ஈஷா' ஆன்மிக அமைப்பை காழ்ப்புணர்ச்சியோடு களங்கப்படுத்த ஈடுபடுத்த திட்டமிட்டு, வன்முறையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், நம் நாடு மட்டுமன்றி பல வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டு இயங்கி வருகிறது.
ஆன்மிகம், யோகா, தியானம் மட்டுமன்றி அப்பகுதியில் மக்களுக்கு கல்வி, இருப்பிடம், சுகாதாரம் என, பல்வேறு நல பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஈஷா யோகா அமைப்பின் மீது மதமாற்ற சக்திகளின் துாண்டுதலோடு சில அமைப்புகள் போலியாக களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
தற்போது ஈஷா யோகா மையம், பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் பயன்பாட்டுக்காக மின் எரியூட்டு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.க.,வினர் எதிர்த்து வருகின்றனர்.
தனிப்பட்ட நபரை துாண்டி விட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
வழக்கை, ஜூன் 26க்கு ஒத்தி வைத்த நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விடும் என நினைத்து, தி.க., உட்பட சிலர் ஆய்வு செய்யப் போகிறோம் என்ற பெயரில் மையத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, இருவரை தாக்கியுள்ளனர்.
எனவே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஹிந்து முன்னணி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.