/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் ஏ.டி.எம்., மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி
/
தனியார் ஏ.டி.எம்., மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி
தனியார் ஏ.டி.எம்., மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி
தனியார் ஏ.டி.எம்., மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி
ADDED : ஜூலை 17, 2024 12:06 AM
கோவை;இருகூர் அருகே தனியார் ஏ.டி.எம்., உடைத்து பணம் திருட முயன்றவரை, சிங்காநல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒண்டிப்புதுார் அடுத்து இருகூர், மார்க்கெட் வீதியில் உள்ள காந்தி சிலை எதிரே தனியார் ஏ.டி.எம்., உள்ளது. கடந்த, 12ம் தேதி மதியம், 3:00 மணிக்கு இந்த ஏ.டி.எம்., பராமரிக்கப்பட்ட நிலையில், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஏஜென்சியை சேர்ந்தவர்கள், மீண்டும் பராமரிக்க சென்றனர்.
அப்போது, ஏ.டி.எம்., 'ஷட்டர்' கதவு பாதி மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தின் முன்பகுதியும், உட்புற பகுதியும் உடைக்கப்பட்டிருந்தது.
ஆனால், 'லாக்கர்' திறக்காததால் பணம் தப்பியது. இதுகுறித்து, சிங்காநல்லுாரை சேர்ந்த ஏஜென்சி உரிமையாளர் மல்லிகா தேவி அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில்,'பணத்தை திருடவந்தவர் ஏ.டி.எம்., அறையில் இருந்த'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளார். முன்னதாக, காட்சிகள் பதிவாகாதிருக்க ஒயர்களையும் 'கட்' செய்துள்ளார். எனவே, வெளியே 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை வைத்துகுற்றவாளியை தேடிவருகிறோம்' என்றனர்.