/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் கவனத்துக்கு; பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப்பாடு
/
வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் கவனத்துக்கு; பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப்பாடு
வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் கவனத்துக்கு; பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப்பாடு
வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் கவனத்துக்கு; பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப்பாடு
ADDED : மே 30, 2024 05:02 AM
கோவை : வெளியே அழைத்துவரும் வளர்ப்பு நாய்களுக்கு, கட்டாயம் கழுத்து பட்டை, வாய்க்கு முகமூடி அணிவிக்கப்பட வேண்டும் என, மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.
மாநகராட்சி பகுதிகளில், தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பயத்துடன் பயணிப்பதுடன், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தெரு நாய்கள் கூட்டமாக குதறும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இதை கட்டுப்படுத்த கடந்தாண்டு ஏப்., முதல் இதுவரை வடக்கு மண்டலத்தில், 1,572 நாய்கள், தெற்கில், 1,211, கிழக்கில், 1,281, மேற்கில், 1,544, மத்தியில், 4,026 என, 9,634 தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தி, பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாலும் மக்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே, வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களால், ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற, மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பொது வெளியில் அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு, கட்டாயம் கழுத்து பட்டை(நெக் காலர்), பெல்ட், வாய்க்கு முகமூடி அணிவிக்கப்பட வேண்டும். வெளியிலும் நாய்களை அவிழ்த்து விடக்கூடாது.
புகார் அளிக்கலாம்!
ரோட்டில் சுற்றும் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளால் இடையூறுகள் குறித்து, 0422 2390262, 2302323, 94437 99242 ஆகிய எண்களிலும், 81900 00200 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் புகார் அளிக்கலாம் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.