/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மட்டையுடன் தேங்காய் ஆனைமலையில் ஏலம்
/
மட்டையுடன் தேங்காய் ஆனைமலையில் ஏலம்
ADDED : ஜூலை 17, 2024 12:38 AM

ஆனைமலை;வேளாண் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோவை விற்பனைக்குழு சார்பில், மட்டையுடன் தேங்காய் மறைமுக ஏலம் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துவங்கப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
முதல் நாளான நேற்று முன்தினம், 4,850 மட்டையுடன் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு தேங்காய் விலை குறைந்தபட்சம், 10.50 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 11.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மூன்று விவசாயிகள், 10 வியாபாரிகள் வந்தனர்.
வாரந்தோறும் திங்கட்கிழமை தேசிய வேளாண் சந்தை இ - நாம் வாயிலாக, மட்டையுடன் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறும், என, கண்காணிப்பாளர் தெரிவித்தார்.