/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து; பள்ளி குழந்தைகள் தப்பினர்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து; பள்ளி குழந்தைகள் தப்பினர்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து; பள்ளி குழந்தைகள் தப்பினர்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து; பள்ளி குழந்தைகள் தப்பினர்
ADDED : ஆக 28, 2024 06:38 AM

போத்தனுார் : குறிச்சி ஹவுசிங் யூனிட் அருகே பள்ளி குழந்தைகளுடன் வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுந்தராபுரம் அடுத்து மதுக்கரை மார்க்கெட் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலை பள்ளி குழந்தைகள் எட்டுக்கும் மேற்பட்டோருடன் ஆட்டோ ஒன்று மதுக்கரை மார்க்கெட் சாலையில் மதுக்கரை நோக்கி செல்ல திரும்பியது. சாலையின் இடதுபுறத்திற்கு வந்த ஆட்டோ சாலையினையொட்டி போடப்பட்டிருந்த மண் மீது ஏறியது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. அப்பகுதியிலிருந்தோர் ஆட்டோவை தூக்கி, குழந்தைகளை மீட்டனர்.
இதில் ஒரு சிறுவனுக்கு தலையில் சிறு காயமேற்பட்டது. மற்ற குழந்தைகள் காயமின்றி தப்பினர், இருப்பினும் குழந்தைகள் பீதியடைந்தனர். டிரைவருக்கு தலை மற்றும் இடது கை தோள்பட்டை பகுதியிலும் காயமேற்பட்டது. தகவலறிந்த பெற்றோர் குழந்தைகளை தைரியப்படுத்தி, அழைத்துச் சென்றனர்.
கந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பொன்னுசாமி விசாரணையில், ஆட்டோ டிரைவர் மதுக்கரை, குரும்பபாளையம், பாரதியார் வீதியை சேர்ந்த,கோபிநாத், 33 என தெரிந்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மண்ணால் விபத்து: விபத்து நடந்த இடத்தில் மழைநீர் வடிகால் கட்ட குழி தோண்டி, மண் ரோட்டில் கொட்டப்பட்டுள்ளது. இதுவே விபத்திற்கு காரணமானது.
டிரைவர் மது போதையில் இருந்ததாகவும், இத்தகையோரின் லைசென்ஸை ரத்து செய்யவேண்டும் எனவும் அப்பகுதியினர் கூறினர்.