/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்க் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
/
பார்க் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
ADDED : ஜூலை 18, 2024 12:12 AM

கோவை : கணியூர், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு, பல்கலை மானியக்குழு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்த அந்தஸ்து, நடப்பு கல்வி ஆண்டு முதல், 2034 வரை, 10 ஆண்டுகாலம் இருக்கும்.
இதற்கான கொண்டாட்டம், கணியூர் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. நிகழ்வில், பார்க் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அனைவரும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
இதே கல்வியாண்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு, 'ஏ பிளஸ்' தரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.