/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் விரிவாக்க மையத்தில் விதை, இடுபொருட்கள் இருப்பு
/
வேளாண் விரிவாக்க மையத்தில் விதை, இடுபொருட்கள் இருப்பு
வேளாண் விரிவாக்க மையத்தில் விதை, இடுபொருட்கள் இருப்பு
வேளாண் விரிவாக்க மையத்தில் விதை, இடுபொருட்கள் இருப்பு
ADDED : ஏப் 12, 2024 10:27 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இடுபொருட்களின் இருப்பு நிலையினை உழவர் செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், தேவையான விதைகளை, விதை கிராம திட்டத்தில் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
கோடை பருவம் மற்றும் சித்திரைப் பட்டத்திற்கு தேவையான நெல், பயறுவகை, நிலக்கடலை, மற்றும் சிறுதானிய விதைகளை மானிய விலையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், நெல் 5,151 கிலோ, சோளம் -1,464 கிலோ, கம்பு -1,764 கிலோ, கேழ்வரகு 966 கிலோ, உளுந்து -9,766 கிலோ, பச்சைப் பயறு- 297 கிலோ, தட்டைப் பயறு 3,394 கிலோ, நிலக்கடலை 14,182 கிலோ விதைகள் இருப்பில் உள்ளது.
மேலும், 2.5 டன் மக்கிய தொழு உரங்களுடன், 2.5 கிலோ சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடியினை நன்கு கலந்து, கடைசி உழவில் இட வேண்டும்.
விதைப்பதற்கு முன்பு விதைகளை அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களுடன் ஆறிய அரிசி கஞ்சியினை கலந்து, விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் கழிந்து விதைக்கலாம். இடுபொருட்களின் இருப்பு நிலையினை உழவர் செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

