/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்து ரூபாய்க்கும் கிடைக்கும்... 4 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கும்! தேசிய கொடி தயாரிப்பு மும்முரம்

ADDED : ஆக 03, 2024 09:56 PM

நாட்டின், 77வது சுதந்திர தினம் வரும், 15ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, கோவை டவுன்ஹால் பகுதியிலும், தேசிய கொடி தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது.
தேசிய கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:
தேசிய கொடி தயாரிக்கும் பணியை, மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டோம். தேசிய கொடிகளை கதர் துணி, மைக்ரோ துணி (கெட்டித்துணி), வெல்வெட் துணி, காட்டன், பேப்பர்களில் அதிகளவில் செய்து வருகிறோம்.
குறைந்தபட்சம், 8க்கு 10 அங்குலம் முதல் அதிகபட்சம், 40க்கு, 72 அங்குலம் வரையும், 5க்கு, 12 அடி முதல் அதிகபட்சம், 15க்கு, 30 அடி வரையும், 6க்கு, 3 மீட்டர் அளவுகளிலும் தயாரிக்கிறோம்.
இங்கு தயாரிக்கப்படும் தேசிய கொடிகள், 10 முதல், 4,000 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எங்களுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.
கேரள மாநிலத்தில் இருந்தும் ஆர்டர்கள் வரும். ஆனால் தற்போது வயநாட்டில் ஏற்பட்ட துயரத்தால் தேசியக்கொடிக்கான ஆர்டர்கள், எந்த அளவுக்கு வரும் என தெரியவில்லை.
குழந்தைகளை கவரும் வகையில் தேசிய கொடி சின்னத்தில் தொப்பி, ஜிப்பா, பலுான், தேச தலைவர்களின் பேட்ச் போன்ற பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு அறிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்தால் தேசிய கொடி, டி-சர்ட், ஐ.பி.எல்., போட்டி கொடிகள், டி-சர்ட், விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்