/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பா.ஜ., ஆலோசனைக்கூட்டம்
/
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பா.ஜ., ஆலோசனைக்கூட்டம்
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பா.ஜ., ஆலோசனைக்கூட்டம்
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பா.ஜ., ஆலோசனைக்கூட்டம்
ADDED : ஆக 10, 2024 11:48 PM

அவிநாசி;அவிநாசி - அத்திக் கடவு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பா.ஜ., சார்பில் நடந்தது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 20ம் தேதி தொடர் உண்ணா விரதப் போராட்டம் துவங்கும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதுதொடர்பான ஆலாசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடந்தது. அவிநாசி - அத்திக்கடவு திட்ட போராட்ட குழு உறுப்பினர்கள், பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் முத்துச்சாமி, திட்டம் முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். போராட்டத்தை தள்ளி வைப்பதா அல்லது அறிவித்த தேதியில் நடத்துவதா என சூழ்நிலையை பொறுத்து மாநில தலைவர் அண்ணாமலை முடிவெடுப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆறு நீரூற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதில், செயல்முறையை கண்டறிய பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட 1,400 குளம் குட்டைகளையும் சேர்த்து நீர் நிரப்பும் வகையில், இரண்டாவது திட்டத்திற்கு அரசாணை வெளியிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது; ஒவ்வொரு ஆண்டும் திட்டம் மூலம் குளம் - குட்டைகளில் நீர் நிரப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

