/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரபல இசைக்கலைஞர்களுக்கு விருது
/
பிரபல இசைக்கலைஞர்களுக்கு விருது
ADDED : மே 16, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : பிரபல இசைக்கலைஞர்களுக்கு விரைவில் விருது வழங்கப்பட உள்ளன.கோவையை சேர்ந்த இசைக்கலைஞர்கள் ராமசந்திரன், ரவிமேனோன் ஆகியோர் நினைவாக சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
ராமசந்திரன், ரவிமேனோன் ஆகியோரது நண்பர்கள், சிஷ்யர்கள் இவ்விருதை வழங்கி வருகின்றனர். இந்தாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, பிரபல கிதார் இசைக்கலைஞர் அசோக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ரவிமேனோன் நினைவாக சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு, கீபோர்டு இசையமைப்பாளர் விபுலானந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும், 21 ம் தேதி நடக்க உள்ள நிகழ்ச்சியில் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.