/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏரிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு குறித்து விழிப்புணர்வு
/
ஏரிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு குறித்து விழிப்புணர்வு
ஏரிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு குறித்து விழிப்புணர்வு
ஏரிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : செப் 03, 2024 02:04 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தார்.
கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா, வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பின் நன்மைகள் குறித்து விளக்கியதுடன், தொடர் வாசிப்பால் பாடங்கள் எளிமையாக புரியும் என மாணவர்களிடம் விளக்கினார்.
மேலும், படித்து புரிந்ததை அடுத்தவர்க்கு எடுத்து கூறலாம் என்றும், அறிவுத்திறன் மேம்படும் நீதியை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவறுத்தினார்.
வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக ஒரே ஒரு கதை கொண்ட சிறு நுால்கள் வந்துள்ளன. படங்களுடன் படிக்க அழகாக எளிமையான முறையில் உள்ளது. அட்டைப் படங்களும், படக்கதை நுால்களும் மாணவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியதால், போட்டி போட்டு படிக்கின்றனர்.
இதில், நுழை, நட, ஓடு, பற எனும் வகைகளில் மாணவர்கள் தர நிலையில் உள்ளது. மாணவர்கள் நுால்களை அவரவர்களின் நிலைகளுக்கேற்ப வாசித்து பயன்பெறுகின்றனர். இவ்வாறு, கூறினார்.