/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 24, 2024 10:31 PM
அன்னுார்;அன்னுாரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
காவல்துறை சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சிதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அன்னுார் பேரூராட்சியில் நடைபெற்றது.
அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பள்ளி முன்புறம் பேரணியாக புறப்பட்டு அவிநாசி ரோட்டில் சி.எஸ்.ஐ. பள்ளி வரை சென்றனர். போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.
பேரணி முடிவில் இன்ஸ்பெக்டர் நித்யா பேசுகையில்,'ஒரு முறைதான் என்று போதை பொருளை பயன்படுத்த முயற்சித்து பார்த்தால், அது தொடர்ந்து விடும். எனவே போதை பொருளை ஒரு முறை கூட பயன்படுத்தக்கூடாது. போதை பொருள் விற்பது, பயன்படுத்துவது அல்லது இருப்பு வைத்திருப்பது குறித்து தகவல் தெரிந்தால் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இதனால் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது தடுக்கப்படும்,' என்றார். எஸ்.ஐ., கள் ராஜேந்திரன், கனகராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.