/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சார பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
மின்சார பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மின்சார பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மின்சார பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 01, 2024 01:39 AM

கோவை;தமிழக மின் ஆய்வுத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை, தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
'பாதுகாப்பு பள்ளியிலிருந்து தொடங்குகிறது' என்பதே நடப்பாண்டின் கருப்பொருளாக உள்ளது. இதையொட்டி, அனுப்பர் பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மின்சார பாதுகாப்பு, மின் விபத்து மற்றும் தடுப்பு வழிமுறைகள், இடி மின்னல்களிலிருந்து பாதுகாத்துகொள்வது என்ற தலைப்புகளில் விளக்க காட்சி, பிரசுரங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை முதுநிலை மின்ஆய்வாளர் செல்வம், மின்ஆய்வாளர் (வடக்கு) சக்திவேல், மின்ஆய்வாளர் (தெற்கு) சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.