/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூட்டை அதிகரிக்கும் உணவு வேண்டாம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
சூட்டை அதிகரிக்கும் உணவு வேண்டாம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூட்டை அதிகரிக்கும் உணவு வேண்டாம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூட்டை அதிகரிக்கும் உணவு வேண்டாம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 06, 2025 09:59 PM
பொள்ளாச்சி, ; வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும் வகையிலான உணவுகளை தவிர்க்க வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், வெயிலின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. கடும் உஷ்ணம் காரணமாக, பலரும், பகலில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
அதேநேரம், உடல் சூட்டை தணிக்கும் வகையில், மோர், பழரசம், நுங்கு உள்ளிட்ட நீராகாரங்களை பருக முனைப்பு காட்டுகின்றனர்.
கடும் வெயில் நிலவி வரும் நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியதுள்ளது. அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. இது சம்பந்தமாக, பல்வேறு அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் உடல் சூட்டை அதிகரிக்கச்செய்யும் வகையிலான உணவுகளை தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
கோடை காலத்தில், அம்மை நோய், உடல் சூட்டினால் வரும் நோய்கள் பெரும்பான்மையாக கவனக்குறைவால் மட்டுமே அதிகரிக்கிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு உடலில் சிறு தடிப்பு மற்றும் அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், அதிகளவில் குடிநீர் பருக வேண்டும். சுத்தமான நீரில், கை கால்களை கழுவுதல் வேண்டும். உடல் சூட்டினை அதிகரிக்கும் வகையிலான உணவுகளை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.
நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெயிலில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என, தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.
மாணவர்களும், வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.