/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிற்சி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு
/
பயிற்சி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 26, 2024 01:25 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, பயிற்சி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து தலைமை வகித்தார். பொள்ளாச்சி கிளை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் சக்திவேல், செயலாளர் டாக்டர் சவுந்தரராஜன் பங்கேற்றனர்.
பல தனியார் டாக்டர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை, மருந்துகள் துறை முதன்மை டாக்டர்கள் வனஜா, கஞ்சம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து, டெங்கு பரவாமல் தடுப்பது குறித்தும்; டெங்கு பாதித்தோருக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
டாக்டர்கள் கூறியதாவது: தற்போது மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
மேலும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை ஆரம்ப கட்டத்திலேயே பெரிய மருத்துவமனைகளுக்கு தொடர் சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.