/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
/
மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 01, 2024 10:26 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியை கீதா, மழைநீர் சேகரிப்பின் வாசகங்களை கூற மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஒரு துளி நீர் சேகரிப்போம் வறட்சியை விரட்டுவோம், மழை இல்லையேல் வளம் இல்லை. வரவிருக்கும் தலைமுறைக்கு நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த பரிசு நீர், என, மழை நீர் சேகரிப்பு வாசகங்களை கூறி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
நீர் சேகரிப்பு குறித்து ஓவியம், கவிதை, கட்டுரை எழுதி காட்சிக்கு வைக்கப்பட்டன.தொடர்ந்து, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் நீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதை புரிய வைக்கும் வகையில், சிறு நாடகம் நடத்தப்பட்டது.
ஆட்டுக்கல், டயர், உடைந்த வாளி, குடங்களில் மழைநீர் தேங்கியிருந்தால் அவற்றை துாய்மைப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவற்றிலிருந்து டெங்கு கொசு பரவி காய்ச்சல் பரவும்.கொதிக்க வைத்த குடிநீரை பருக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.