/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் சேர்க்கைக்கு பள்ளியில் விழிப்புணர்வு
/
மாணவர் சேர்க்கைக்கு பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : மார் 28, 2024 11:18 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கிணத்துக்கடவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,215 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி உண்டு. பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பிரசாரத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று நோட்டீஸ் வழங்கி, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார்கள். மேலும், அரசு பள்ளியில் கல்வி பயில்வதால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பெற்றோர்களிடையே விளக்கம் அளித்தனர்.

