/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
/
அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 21, 2024 11:03 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ரஷியாபீபி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் பங்கேற்றார். பள்ளி, மாணவ, மாணவியர் நாடகம், நடனம் வாயிலாக அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு, படித்த முடித்தபின் வேலைவாய்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
மேலும், 2024-25ம் கல்வியாண்டு, முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாலை மற்றும் கிரீடம் அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என, துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கவுன்சிலர்கள் சுப்ரமணியம், அருண்பிரசாத், ஆசிரியர்கள் சித்ரா, அம்சவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

