/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
மாநகர போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 04, 2024 05:42 AM

கோவை : கோவை மாநகர போலீசார் சார்பில், நடத்தப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, போதை பொருள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் விபத்தில்லா கோவை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 78 கி.மீ., சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார். இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. பேரணியில், 16 வயது முதல் பெரியவர் வரை, 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணி, டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, சாடிவயல், ஈசா யோகா மையம் சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக சென்று, இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் நிறைவடைந்தது.
சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள் பி.ஆர்.எஸ்., மைதானத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.