/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளியில் ஏற்படும் நுாற்புழு தாக்குதல் தடுக்க விழிப்புணர்வு
/
தக்காளியில் ஏற்படும் நுாற்புழு தாக்குதல் தடுக்க விழிப்புணர்வு
தக்காளியில் ஏற்படும் நுாற்புழு தாக்குதல் தடுக்க விழிப்புணர்வு
தக்காளியில் ஏற்படும் நுாற்புழு தாக்குதல் தடுக்க விழிப்புணர்வு
ADDED : மே 27, 2024 12:41 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சட்டக்கல்புதூரில் வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி, மணக்கடவில் உள்ள வாணவராயர் கல்லூரி மாணவர்கள், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், இரண்டு மாதம் கிராம தங்கள் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், சொக்கனூர் ஊராட்சி சட்டக்கல்புதூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், தக்காளியில் ஏற்படும் நூற்புழு தாக்குதலை தடுக்க ஒட்டு கட்டுதல் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வாழையை தாக்கும் நோய்க்கு ஆலோசனை மற்றும் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், தென்னையில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
பாரம்பரிய நாட்டு விதைகள் கண்காட்சி நடந்தது. இதை விவசாயிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், வாணவராயர் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.