/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி ஆயுர்வேதத்தில் இருக்கிறது தீர்வு
/
முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி ஆயுர்வேதத்தில் இருக்கிறது தீர்வு
முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி ஆயுர்வேதத்தில் இருக்கிறது தீர்வு
முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி ஆயுர்வேதத்தில் இருக்கிறது தீர்வு
ADDED : ஆக 17, 2024 11:35 PM
வயது அதிகரிக்கும் போது மறதியும் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு இருக்கிறது என்கிறார், ஆயுர்வேத டாக்டர் சிவக்குமார்.
அவர் மேலும் கூறியதாவது:
முதுமையில் ஏற்படும் மறதிக்கு, வயது காரணமாக இருந்தாலும், குடும்பமும் ஒரு காரணமாக இருக்கிறது. முதுமை காலத்தில் முதியவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அவர்களே முடிவு எடுக்க விட வேண்டும், அவர்களிடம் எதையும் திணிக்கக் கூடாது. அவர்களுக்கு மன ரீதியாக பிரச்னை ஏற்பட்டு மறதி ஏற்படுகிறது. முக்கியமாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவேண்டும்.
50 வயதிற்கு பின் சர்க்கரை நோய், மூட்டு வாதம், முடக்கு வாதம், இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகளால் மறதி ஏற்படும். இதனை ஆயுர்வேத சிகிச்சை வாயிலாக குணப்படுத்தலாம்.
பெரும்பாலும் முதியவர்களுக்கு, அவர்களின் சிறு வயதில் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவில் இருக்கும்(Long term memory). ஆனால் தற்போது நடக்கும் எதுவும் நினைவில் இருக்காது. காலையில் சாப்பிட்டதை கேட்டால் கூட தெரியாது. இதற்கு குடும்பம்தான் சிறந்த மருந்து.
வீட்டில் உள்ள முதியவர்களிடம் அதிகம் பேச வேண்டும். அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும். மறதியை, 60 சதவீதம் சிகிச்சையாலும், 90 சதவீதம் குடும்பத்தினராலும் தான் குணப்படுத்த முடியும். இந்த காரணங்கள் இல்லாமல் ஏற்படும் மறதி நோய்களை, ஆயுர்வேத சிகிச்சையில் குணப்படுத்தி விடலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

