/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அய்யா வைகுண்டர் அவதார தின விழா
/
அய்யா வைகுண்டர் அவதார தின விழா
ADDED : மார் 04, 2025 11:35 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் அய்யா நாராயணசுவாமி கோவிலில் அவதார தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி கந்தவேல் லே-அவுட்டில் ஸ்ரீமன் அய்யா நாராயணசாமி கோவிலில், வைகுண்டரின், 193வது அவதார தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
மதியம், 12:00 மணிக்கு உச்சி பூஜை, 1:00 மணிக்கு அன்னதானம், மதியம், 1:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, அய்யா வைகுண்ட சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து, வாழை தார், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற கனிகள், தேங்காய், பூக்கள் படைத்து வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்று பகுதியில் இருந்து திரளான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வசந்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.