/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்ப சுவாமி கோவில் விழா கமிட்டி தேர்வு
/
ஐயப்ப சுவாமி கோவில் விழா கமிட்டி தேர்வு
ADDED : நவ 06, 2024 09:14 PM
வால்பாறை; வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் நடந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வும், கவுரவ தலைவர் கிருஷ்ணாஷ்சுதீர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், இந்த ஆண்டு மண்டல பூஜை திருவிழா டிசம்பர் மாதம், 11ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடத்துவது என்றும், விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவிலின் தலைவராக பிரசன்னாகுமார், துணைத்தலைவராக மனோகரன், செயலாளராக காயத்திரிராஜன், துணை செயலாளராக ரவி, பொருளாளராக குட்டன் திருமேனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை விழா கமிட்டி தலைவராக சேகர், துணைத் தலைவராக பிரமேஷ், செயலாளராக சுனில், துணை செயலாளராக மணிகண்டன், பொருளாளராக பாலு, துணை பொருளாளராக பங்கஜாக்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.