/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு அணையில் சரிகிறது நீர் இருப்பு :குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
/
ஆழியாறு அணையில் சரிகிறது நீர் இருப்பு :குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ஆழியாறு அணையில் சரிகிறது நீர் இருப்பு :குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ஆழியாறு அணையில் சரிகிறது நீர் இருப்பு :குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 30, 2024 11:09 PM
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,' என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 90,124 மக்கள் தொகை உள்ளது.தினமும், ஆழியாறு ஆற்றில், அம்பராம்பாளையம் அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளுக்கு, 1.40 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
அதன்பின், மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, 1.10 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது.
ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக, 107 லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கோடைக்காலம் என்பதாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும் ஆழியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. பாசனத்துக்கு அரைகுறையாக தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்ணீரின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து, நகரில் வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாகபயன்படுத்த வேண்டுமென, நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நகராட்சி கமிஷனர் சுப்பையா அறிக்கை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36 வார்டுகளுக்கும் ஆழியாறு ஆற்றில், அம்பராம்பாளையத்தில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, ஆழியாறு அணையில் தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து வருவதால், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.