/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆ' குறுமையங்கள்; கேரம் விளையாட்டில் அபாரம்
/
'ஆ' குறுமையங்கள்; கேரம் விளையாட்டில் அபாரம்
ADDED : ஆக 04, 2024 11:03 PM

கோவை : பள்ளிக்கல்வித்துறையின் 'ஆ' குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்தது.
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட குறுமையங்கள் அளவிலான விளையாட்டு போட்டிகள், பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன. இதன் 'ஆ' குறுமைய விளையாட்டு போட்டிகள் சி.எம்.எஸ்., பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது.
இதில் கேரம் போட்டி, ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. 'ஆ' குறுமையத்துக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
வெற்றியாளர்கள் விபரம்
கேரம் ஒற்றையர் போட்டியில், மாணவர்கள் 14 வயது பிரிவில் பி.ஆர். சித்தா நாயுடு பள்ளி முதலிடம், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
17 வயது பிரிவில் ஸ்டேன்ஸ் பள்ளி முதலிடம், சித்தாபுதுார் மாநகராட்சி உயர்நிலை பள்ளி இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் ராசகொண்டலார் பள்ளி முதலிடம், பி.ஆர். சித்தா நாயுடு இரண்டாமிடம் பிடித்தன.
கேரம் ஒற்றையர் போட்டியில் மாணவிகள் 14 வயது பிரிவில் மணி மேல்நிலை பள்ளி முதலிடம், பி.ஆர்., சித்தா நாயுடு பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளி முதலிடம் பிடித்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி இரண்டாமிடம்;19 வயது பிரிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முதலிடம், கணபதி அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
இரட்டையர் போட்டியில் 14 வயது மாணவர் பிரிவில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி முதலிடம், பி.ஆர். சித்தா நாயுடு பள்ளி இரண்டாமிடம்; மாணவிகளில், அவிநாசி ரோடு சி.எஸ்.ஐ., அரசு பள்ளி முதலிடம், பி.ஆர். சித்தா நாயுடு பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
17 வயது பிரிவில் கணபதி அரசு உயர்நிலை பள்ளி முதலிடம், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி இரண்டாமிடம்; மாணவிகள் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி முதலிடம், கணபதி அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
19 வயது மாணவர் பிரிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முதலிடம், பி.ஆர். சித்தா நாயுடு பள்ளி இரண்டாமிடம்; மாணவிகள் பிரிவில், பி.ஆர். சித்தா நாயுடு பள்ளி முதலிடம்; ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.