/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆ' குறுமைய கூடைப்பந்து; மாணவியர் அபார விளையாட்டு
/
'ஆ' குறுமைய கூடைப்பந்து; மாணவியர் அபார விளையாட்டு
ADDED : ஆக 01, 2024 01:45 AM

கோவை : பள்ளி கல்வித்துறையின் 'ஆ' குறுமைய கூடைப்பந்து போட்டியில், மாணவியர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கோவை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, பள்ளிகளுக்கு இடையேயான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் 'ஆ' குறுமைய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கணபதி சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி சார்பில் நடத்தப்படுகின்றன.
இதன் மாணவியர் பிரிவு கூடைப்பந்து போட்டி, ரேஸ்கோர்ஸ் வி.சி.வி., சிசு வித்யோதயா பள்ளியில் நேற்று நடந்தது.
போட்டியை பள்ளி செயலாளர் பல்லவி மன்றடியார், சி.எம்.எஸ்., பள்ளி முதல்வர் ஸ்ரீபிரியா, துணை முதல்வர் சாபு, வி.சி.வி., சிசு பள்ளி துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
14 வயது பிரிவு மாணவியர் அரையிறுதிப்போட்டியில் செயின்ட் பிரான்சிஸ் பள்ளி அணி 29 - 19 என்ற புள்ளிக்கணக்கில் செயின்ட் ஜோசப் பள்ளி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
19 வயது பிரிவு மாணவியர் அரையிறுதியில், செயின்ட் ஜோசப் பள்ளி அணி 29 - 10 என்ற புள்ளிக்கணக்கில் நிர்மலா மெட்ரிக்., பள்ளி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
19 வயது பிரிவு மாணவியர் அரையிறுதியில், செயின்ட் ஜோசப் பள்ளி அணி 29 - 10 என்ற புள்ளிக்கணக்கில் நிர்மலா மெட்ரிக்., பள்ளி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.