/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாகுபலி' யானையால் விவசாயம் பாதிப்பு; வன அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையீடு

ADDED : ஆக 06, 2024 11:48 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், உலா வரும் பாகுபலி காட்டு யானையை பிடித்து, வேறு இடத்தில் விடக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாகுபலி காட்டு யானை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து, பாகுபலி காட்டு யானையை பிடித்து, மீண்டும் இங்கு வராதப்படி வேறு இடத்தில் விடக்கோரி, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில், மேட்டுப்பாளையத்தில், விவசாயிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின், விவசாயிகள் பலர், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகம் சென்று, கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயக்குமார், வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்.