தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கான பூப்பந்து பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'

மாணவர்களுக்கான பூப்பந்து பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'

மாணவர்களுக்கான பூப்பந்து பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'


ADDED : ஆக 31, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;ஐ.பி.ஏ.ஏ., மாணவர்களுக்கான பூப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்(ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் மண்டல அளவிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி நேற்று நடந்தது. உடற்கல்வி துறை ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன.

கல்லுாரியின் ஆயத்த ஆடை துறை தலைவர் சந்திரசேகரன் போட்டிகளை துவக்கி வைத்தார். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 35-22, 35-28 என, 2-0 என்ற 'செட்' கணக்கில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.

மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியும், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில், 37-34, 33-35, 35-32 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி முன்னிலை பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் கிரிராஜ், நடுவர்கள் ரகுபதி, முரளி ஆகியோர் பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us