/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூப்பந்து அணி தேர்வு ஆக., 4ல் நடக்கிறது
/
பூப்பந்து அணி தேர்வு ஆக., 4ல் நடக்கிறது
ADDED : ஜூலை 28, 2024 08:56 PM
கோவை;கோவை மாவட்ட பூப்பந்து சப்-ஜூனியர் அணி தேர்வு வரும், ஆக., 4ம் தேதி நடக்கிறது.
கோவை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்காக மாவட்ட அணி தேர்வு, அவிநாசி சாலையில் உள்ள ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது.
இதில், 2.1.2009க்கு பின்னர் பிறந்த, கோவையை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். தேர்வாகும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, தஞ்சாவூரில் நடக்கவுள்ள 43வது தமிழ்நாடு மாநில பூப்பந்து போட்டியில், கோவை சார்பில் பங்கேற்பர்.
இத்தேர்வு போட்டியில் பங்கேற்க, அனுமதி கட்டணம் இல்லை. பங்கேற்க விரும்புவோர், 98431 43210 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.