/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாட்சியை மிரட்டிய வழக்கில் இருவர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
/
சாட்சியை மிரட்டிய வழக்கில் இருவர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
சாட்சியை மிரட்டிய வழக்கில் இருவர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
சாட்சியை மிரட்டிய வழக்கில் இருவர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
ADDED : பிப் 15, 2025 07:13 AM
கோவை; கோர்ட்டில் சாட்சி அளிக்க வந்தவரை மிரட்டிய வழக்கில், இருவரது ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாரூக்,31; இரும்பு வியாபாரி. 2017, மார்ச் 16ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அக்ரம் ஜிந்தா,32, சதாம் உசேன், 35, சம்சுதின்,38, உக்கடம் அன்சாத்,37, ஜாபர் அலி,36, அப்துல்முனாப்,38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், கோர்ட்டில் சாட்சியளிக்க வந்தவருக்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
இவர்கள் மீது புதிய வழக்கு பதிந்து தேடி வந்தனர். ஆறுபேரும் கடந்த டிசம்பரில் சரணடைந்ததை தொடர்ந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், ஜாமினில் விடுவிக்க கோரி, 6 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில், அன்சாத், சதாம்உசேன் ஜாமின் மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.

